Microsoft நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தயாரிப்புகளில் முதன்மையானது MS Office மென்பொருள். இதை Windows கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும் என்பதை தாண்டி., MAC கணினிகள், iPad என தனது போட்டியாளரின் பயனர் சந்தையை தனது சந்தையாக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாக Microsoft ஈடுபட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது ஆப்பிள் iPhone அலைபேசிகளுக்கான ios இயங்குதளத்தில் செயல்படக்கூடிய மைக்ரோச்சாஃப்ட் ஆபிஸ் மொபைல் இலவச iPhone APPகளை அறிமுகப்படுத்தியது.
அவை அறிமுகமான நாலே நாட்களில் அவை ஆப்பிளில் iTunes Most Downloaded பட்டியலில் முதல் இடத்திற்க்கு சென்றுள்ளது.
இந்த வரிசையில் Microsoft Word முதல் இடத்திலும், Microsoft Excel எட்டாவது இடத்திலும் Microsoft PowerPoint பத்தாவது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்த மென்பொருள்களுக்கு மாற்றாக ஆப்பிளின் தாயாரிப்பான Pages இது Word க்கும் மாற்றானது பதினாறாவது இடத்திலும், Excel மாற்றான Numbers பதினேழாவதி இடத்திலும், PowerPointக்கு மாற்றான Keynote பதினெட்டாவது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருட்கள் கோப்புகளை தயாரிக்கப் பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு மிக எளிதானதாகவும் பயனாளர் நண்பனாக இருப்பதாலுமே, இத்தகைய வெற்றியை மிக எளிதாக பெற முடிந்தது. இது வரை IOS பயனாளர்கள் கோப்பு பணிகளுக்கு சிரமப்பட்டு இருந்துள்ள உண்மை, இதன் வேகமான பதிவிறக்க வளர்ச்சி மூலம் தெரிகிறது. இனி மைக்ரோசாஃப்ட் தனது மென்பொருட்களுக்கு மாத / வருட பயன்பாட்டுச் சந்தா வசூலித்து தனது வருமானத்தினை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மைக்ரோசாஃப்டின் முதன்மைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா கொடுத்த தகவலானது. இந்த மென்பொருட்களை இன்னும் மேன்மைப்படுத்தி கொடுக்கும் போது வாடிக்கையாளர்கள் சந்தா செலுத்தி பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.