2 வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது மும்பை அணி. போராடி தோல்வி அடைந்த சென்னை.

[carousel ids=”64161,64162,64163,64164,64165,64166″]

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடியும், சென்னை அணிக்கு ரூ.10 கோடியும் பரிசு வழங்கப்பட்டது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி,முதல் ஓவரிலேயே பார்த்தீவ் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனாலும், அதன் பின்னர் களமிறங்கிய சிம்மன்ஸ், ரோஹித் சர்மா, பொல்லார்டு, ராயுடு ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்களுக்கு 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என இமாலய ஸ்கோரை நோக்கி களமிறங்கிய சென்னை அணி, மும்பை பவுலர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகனாக் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply