ஐபிஎல் போட்டியில் மிஸ் ஆகும் விராத் கோஹ்லி, அஸ்வின், முரளி விஜய். அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஏப்ரல் 5முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் 2017 போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விராத் கோஹ்லி, அஸ்வின், முரளி விஜய் உள்பட முன்னணி வீரர்கள் விலகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த ஜே.பி. டுமினி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல், புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம்பிடித்துள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் காயம் மற்றும் பிற காரணங்களால் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிகிறது.
முன்னணி வீரர்கள் இல்லாத ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு களையிழந்து காணப்படுவதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்