பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஐபிஎல் போட்டியிலும் விளையாட ஸ்மித்துக்கு தடை வருமா?

smithபந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஐபிஎல் போட்டியிலும் விளையாட ஸ்மித்துக்கு தடை வருமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித், பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவரை ஆஸ்திரேலிய அரசு அணியில் இருந்து நீக்கியது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல் அணியில் கேப்டனாக இருக்கும் அவரை ஐபிஎல் போட்டியில் இருந்தும் நீக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ‘‘பிசிசிஐ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ தண்டனை அறிவிப்பிற்காக காத்திருக்கிறது. தற்போது வரை பிசிசிஐ-யோ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

ஐசிசியின் தண்டனையின் அளவைப் பொறுத்துதான் நாங்கள் முடிவு எடுப்போம். ஸ்மித் அந்த அணிக்கு முக்கியமானவர். அத்துடன் கேப்டனாகவும் உள்ளார். இதனால்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.

ஸ்மித் மற்றும் வார்னரை பதவியில் இருந்து தூக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம். இதை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள ஒன்றுமில்லை. நாங்கள் ஐசிசி தண்டனையைத்தான் கருத்துக் கொள்வோம்’’ என்றார்

Leave a Reply