ஐபிஎல் கிரிக்கெட்: அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி, வெளியேறும் அணி எவை எவை?
ஐபிஎல் 2017 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஐந்து லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் மும்பை அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி என்ற நிலையில் உள்ளது. மீதியுள்ள கொல்கத்தா, புனே, ஐதராபாத், பஞ்சாப் ஆகிய நான்கு அணிகளில் ஒரு அணி வெளியேற வேண்டிய நிலை உள்ளது.
பஞ்சாப் அணி தற்போது 14 புள்ளிகள் எடுத்து ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றால் அது ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்திற்கு முன்னேறி விடும். அதேபோல் இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள புனே, ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
அதேபோல் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இன்னும் தலா ஒரு போட்டி உள்ளது. இந்த அணிகளும் அந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். எனவே இனிவரும் ஐந்து போட்டிகளில் டெல்லி vs பெங்களூர் போட்டி தவிர மீதி அனைத்து போட்டிகளும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.