ஆரம்பமாகிறது ஐ.பி.எல் திருவிழா. பெரிய திரையில் திரையிட கோவையில் ஏற்பாடு.

IPL-Theatresஐ.பி.எல் போட்டிகளின் போது கோவை உள்ளிட்ட நகரங்களில் பெரிய திரையில் போட்டிகளை ரசிக்கும் வகையில் ஃபேன்பார்க் உருவாக்கப்படவுள்ளது. ஆயிரணக்கானோருடன் இணைந்து போட்டியை ரசிப்பது வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்.

உலகக் கோப்பை கால்பந்து, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மொத்தமாக அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் ஃபேன்பார்க் உருவாக்கப்படும். ரசிகர்கள் இங்கு ஒன்று திரண்டு போட்டியை ரசிப்பது வித்தியாசமாக இருக்கும். நடப்பு ஐ.பி.எல். தொடரின் போது இதே போன்ற யுக்தியை இந்தியாவிலும் புகுத்த ஐ.பி.எல். நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இந்தியாவில் 15 முக்கிய நகரங்களில் இது போன்ற ஃபேன்பார்க் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை நகரமும் ஒன்று. இங்கு வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் பிரமாண்டமான திரையில் போட்டிகள் ஒளிரபரப்பப்படவுள்ளது.

இதில் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு சன்ரைசர்ஸ் அணி டெல்லி அணியையும், இரவு 8 மணிக்கு  கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியையும் எதிர்கொள்கின்றன. 19ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் மாலை 4மணிக்கு சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் இரவு 8மணிக்கு ராயல்சேலஞ்சர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

வாரஇறுதி நாட்களில் மட்டுமே ஃபேன்பார்க் செயல்படும். போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ரசிகர்கள் ஃபேன்பார்க்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஃபேன்பார்க் உள்ளே உணவு ஸ்டால்கள், இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு போட்டிகளை பார்க்க எந்த கட்டணமும் கிடையாது.முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

மெட்ரோபொலிடன் நகரங்களில்  ரசிகர்களுக்கு ஐ.பி.எல். போட்டிகளை நேரில் காண வாய்ப்புகள் இருப்பதால் கோவை போன்ற இரண்டாம்கட்ட நகரங்களில் ஃபேன்பார்க் முலம் ரசிகர்களை கவர முடியும் என ஐ.பி.எல். நிர்வாகம் கருதுவதால் இந்த ஸ்பெஷல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Leave a Reply