ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி, குஜராத் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதால் முதலில் களமிறங்கிய குஜராத், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 53 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்தனர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து எளிதான வெற்றியை பெற்றது.
இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.