சூதாட்டத்தில் தொடர்பு கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணீ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகியவை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக முத்கல் குழு அமைக்கபட்டது. இந்த குழு தனது முழு விசாரணையை முடித்து சில நாட்களுக்கு முன்னர் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், கலிஃபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில் சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், ஐபிஎல் சூதாட்டம் பற்றிய பிசிசிஐ விசாரணைக்குழு சரியாக செயல்பட வில்லை என்றும், பிசிசிஐ லாப நோக்கில்லாத அமைப்பு அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்