கமல்ஹாசனுடன் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா சந்திப்பு
சமீபத்தில் டெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவும் நடிகர் கமல்ஹாசனும் சந்தித்து கொண்டனர். இந்த தகவலை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். .
தமிழக நண்பர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்து கொள்கிறேன். நடிகர், இயக்குனர் கமல்ஹாசனை டெல்லி நிகழ்ச்சியில் சந்தித்தேன். இந்த நிமிடம் எனது மகிழ்ச்சிக்குரி நேரம்’ என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா அவர்கள், சமீபத்தில் சசிகலா, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை வெட்டவெளிச்சமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
For all my friends from Tamilnadu…. when I could catch a moment with the versatile actor-director .@ikamalhaasan at @TimesLitFestDel pic.twitter.com/mmwN8UX29v
— D Roopa IPS (@D_Roopa_IPS) November 26, 2017