ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈராக். அமெரிக்காவிற்கு புதிய தலைவலி?

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈராக். அமெரிக்காவிற்கு புதிய தலைவலி?
putin
அமெரிக்காவுக்கு பெரும் சவால்களை கொடுத்து எதிரி நாடாக இருந்து வரும் ரஷ்யாவுடன் தற்போது அமெரிக்காவின் இன்னொரு எதிரி நாடான ஈராக்கும் இணைந்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதால் அமெரிக்காவிற்கு புதிய தலைவலி தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சிரிய அதிபரின் வேண்டுகோளை ஏற்று ரஷ்யாவும் ஐ.எஸ்.ஐ.எஸ், தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈராக் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் ஈராக், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தவேண்டும் என்றும், இந்த பிரச்சனையில் ரஷ்யா முக்கிய பாத்திரத்தை ஏற்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்காவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த  பாத்திரத்தை ரஷ்யா ஏற்கவேண்டும் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்துள்ளார். இந்த கருத்து அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சனையை மையமாக வைத்து ரஷ்யாவும் ஈராக்கும் இணைந்து கொண்டால் தனக்கு புதிய தலைவலி உண்டாகும் என்று அமெரிக்க கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply