வளமான நிலம் இறைவனின் கட்டளையைக் கொண்டு பயிர்களை வெளிப்படுத்துகிறது. களர் நிலம் சொற்ப விளைச்சலையே ஏற்படுத்துகிறது. நல்ல பூமியிலிருந்து நல்ல விளைச்சலை பார்க்க முடிகிறது. வெறும் தண்ணீரை பாய்ச்சினாலே போதும் அதிக உரம் இட வேண்டாம். நல்லபடியாக விளையும்.
அதே நேரம், களர் நிலம் அல்லது உவர் நிலம், எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் நல்லபடியாக பயிர்கள் விளையாது.
சிறுவயதில் வயல் பக்கம் போகும் போதும், அந்த நிலங்களில் வசிக்கும் மக்களைப் பார்த்துக் கேட்பதுண்டு. ‘ஏன் இந்த வயலில் எப்போதும் பயிர் நல்லபடியாக வளர்வதில்லை?’ அதற்கு அவர்கள், ‘இது உவர் நிலம். சரியாக பயிர் வளராது.’ என்பார்கள்.
மனிதர்களிலும் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் என்று இரண்டு வகை. நல்லவர்கள் மனத்தில் உருவாகும் எண்ணம் அது விளைச்சல். அது நல்ல எண்ணங்களாகவே உருவாகிறது. அதனால் அவர்கள் செய்யும் செயல்கள் நல்ல செயல்களாக அமைகின்றன. அவர்களால் பூமிக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. கெட்ட மனிதர்கள் கெட்ட எண்ணங்கள். அது கெட்ட விளைச்சல்கள் அவர்கள் செயல்கள். கெட்டதாகவே அமைகின்றன. பூமிக்கு அவர்களால் எந்த நன்மையுமில்லை.
இறைவன் பூமியில் மனிதர்களை வசிக்கச் செய்கிறான். மனிதர்களுக்கு எல்லா வசதிகளையும் அளிக்கிறான்.
மனிதனுக்கு தேவையான காற்றையும், நீரையும், நீரினால் உணவுப் பொருட்களையும் கொடுத்து வசிக்கச் செய்கிறான்.
மனிதர்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கிறான். இந்த சென்னைப் பட்டணத்தை எல்லா வசதிகளையும் உடையதாக ஆக்கி இருந்தான். இப்போது சென்னையில் இருக்கும் தியாகராய நகர், முன்பு அங்கே ஏரி இருந்தது. வள்ளுவர் கோட்டத்தில் ஏரி, ஸ்பர் ஏரி, இப்படியாக அடையாறு வரை. ஜெமினி பிளை ஓவரோடு அந்த பகுதி மவுண்ட் ரோடு மேற்கு பக்கம் ஏரி கிடையாது. மேற்கு மாம்பலம் என்ற கிராமம். சுற்றி பல கிராமங்களை அடையாறு போட் கிளப்புகள் படகுப் போட்டி நடத்திக் கொண்டு இருந்தார்கள். சைதாப்பேட்டை வரை ஏரி தான். சென்னைப் பட்டணத்துக்கு மேற்கே ஆந்திராவிலிருந்து வரக் கூடிய ஆறுகள் வந்து சென்னையில் கடலில் கலந்தன. அந்த ஆற்றின் இரு பக்கமும் குளங்கள், ஏரிகள். அந்த நீரில் மனிதர்கள் குளித்தும், குடித்தும், அந்த நீர் வழியைப் போக்குவரத்துக்கும், அந்த நீரை விவசாயத்துக்கும் தோப்புகளுக்கும் பயன்படுத்தி வந்தார்கள். வியாசர்பாடி, பெரம்பூரிலும் பெரிய ஏரி குளம் உண்டு. எல்லாமே அழிக்கப்பட்டன.
கிழக்கே கடல் மேற்கே ஆறு குளங்கள், தோட்டங்கள் என்று இந்தப் பகுதி மக்களுக்கு தேவையான உணவு கிடைத்து வந்திருக்கிறது. இந்த நகரத்தில் பணத்தை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்ததும், பணத்தைக் கொண்டு எல்லாமே வாங்கிவ்டலாம் என்று இறைவனுடைய அமைப்புகளை அழித்தார்கள். இறைவன் கடற்கரையிலிருந்து அந்த ஏரிகள் வரை மேடாக பகுதியாகவும், பின்பு ஏரிகளை அமைத்து அதற்கு மேற்கே ஊர்களை அமைத்து, அந்த ஊர்களின் வடிகால்கள் கிழக்கு நோக்கி ஏரியில் கலப்பதற்கும் அமைத்திருக்கிறான். மேற்குப் பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் இடையே உள்ள ஏரிகளை நீக்கிவிட்டால் அங்கே எப்படி வடிகால் அமையும்?
எனவே மேற்கேயிருந்து தண்ணீர் அதிக அளவில் வரும்போது அங்கே ஏரி இல்லை. அதிக அளவில் வரும்போது அங்கே ஏரி இல்லை. இருந்திருந்தால் எல்லாமே கடலுக்கு போயிருக்கும்.
நமக்கு இப்போது கிடைக்கும் தண்ணீர் பூமியிலிருந்து கிடைப்பது ஏரித் தண்ணீர், ஆற்றுத் தண்ணீர் இல்லை. இது வெப்பமான தண்ணீர் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தகுதியில்லாத நீர். நாம் தினமும் பூமிக்குள்ளேயிருந்து வரும் நீரில் தான் குளிக்கிறோம்.
இதனால், இன்று மனிதர்களுக்கு தோல் வியாதிகள் ஏராளமாக உண்டாகின்றன. தோலில் வெள்ளை நிறத்தில் காளான் நோய், தோலில் கருப்பாக எக்ஸிமா என்ற நோய், தோலில் எப்போதும் அரிப்பு, உதட்டில் வெள்ளை, அதாவது ‘விட்டிலைகோ’ என்ற நோய், தலையில் அதிகமான பேன், பொடுகு போன்ற நோய்கள். மேற்குறிப்பிட்ட எந்த நோய்களுமே மருந்து மாத்திரைகளால் குணமாகாது.
ஆயின்மெண்ட், மாத்திரை போடும் போது ‘சொரியாஸிஸ்’ என்ற நோய் அதன் கஷ்டம் குறையும். ஆனால் அந்த நோய் இறக்கும் வரை போகாது. இப்படி இன்னும் எண்ணற்ற தோல் வியாதிகளால் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் யாருக்கும் நோய் குணமாகாது. வருடக் கணக்கில் மாத்திரைகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
அந்த அளவுக்கு நாம் குடிக்கும் தண்ணீரும், குளிக்கும் தண்ணீரும் கெட்டு விட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும், ஆற்று நீரும், ஊற்று நீரும் கிடைக்காது. இந்த வெப்பத்தண்ணீரில் விளையும் காய்கறிகள், பழங்கள், இதில் பழங்கள், ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, எல்லாமே புளிக்கின்றன.
புளித்த பழங்களை சென்னை மக்கள் கூடை கூடையாக வாங்கிச் செல்கிறார்கள். எந்த பழமாவது இனிக்கிறதா? பழம் புளித்தால் எந்த நன்மையும் இல்லை. தூர வீசி விட வேண்டும். காசு கொடுத்து வாங்கினோமே என்று பார்க்காமல் தூரப் போட வேண்டும்.
இனிப்பான பழங்கள் வேண்டும் என்று விரும்ப வேண்டும். நல்ல தண்ணீர் வேண்டும் என்று விரும்ப வேண்டும். தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்று விரும்ப வேண்டும்.
கொடிய மழை, கன மழை வேண்டாம் என்று பிரார்த்திக்க வேண்டும். நல்ல உணவு வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். நிறைய பணம் வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டாம். பணத்தை இறைவன் படைக்கவில்லை. மனிதன் அச்சடித்தது பணம். உணவு இறைவன் படைத்தது. கேட்டால் கொடுப்பான்.
எந்த பிரயோசனமும் இல்லாத மரங்களை சென்னை முழுவதும் பார்க்கிறோம். அதற்குப் பதிலாக பழ மரங்களை நடலாமே. காய்கறிகளை உற்பத்தி செய்யலாமே. நல்ல உணவு கிடைக்கும். நாம் விரும்பினால் சென்னை முழுவதும் பழத் தோட்டங்களும் காய்கறிகளும் உருவாகும்.
ஆனால் மனிதர்களோ பணம், அதிகமாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதைக் கொண்டு நோய்களுக்கு செலவு செய்கிறார்கள். அசுத்தமான உணவை உண்கிறார்கள்.
சென்னையில் 42 வயது நிரம்பியவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். அவருடைய முழு எண்ணமும் பணம் சம்பாதிப்பதிலேயே இருந்தது. ஊர் உலகம் எதைப் பற்றியுமே கவலைப்படாதவர். நாம் இந்த பூமியில் பாதுகாப்பாக வாழ வேண்டுமே என்று எந்த எண்ணமும் இல்லாமல் வாழ்ந்தவர், திடீரென்று மார்பு வலி கடுமையாகவே, பெரிய மருத்துவமனைக்குச் செல்கிறார்.
அங்கே இ.சி.ஜி, ஆஞ்சியோகிராம், பார்த்து இருதய ரத்தக்குழாயில் அடைப்பு, ஸ்டெண்ட் பொருத்தப்பட்டு வெளியே வரும் போது 3 ¼ லட்சம் பணம் கட்டிவிட்டு வெளியே வந்தார்.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதில் அவர் இருந்த பகுதி தண்ணீரில் மூழ்கிவிட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேறி, பெட்ரோல் பங்கை நடத்துவதில் ஏற்பட்ட சிரமம், வேலைக்கு போதிய ஆள் கிடைக்கவில்லை. பெட்ரோல் கம்பெனியிலிருந்து விற்பனை ஏன் குறைந்துவிட்டது என்ற விசாரணை எல்லாமே சேர்ந்து, மனிதனை சாகும் அளவுக்கு, மாரடைப்பால் கொண்டு விட்டிருக்கிறது.
மீண்டும் பணம் சம்பாதிக்க கிளம்பி விடுவார்கள். இருதய அடைப்புக்கு இனிமேல் வாழ்நாள் முழுவதும் மாத்திரை. இதுவரையிலும் மாத்திரையே சாப்பிடாமல் வாழ்ந்தவர். இனி தொடர்ந்து சாப்பிடுவார்.
தொடர்ந்து சாப்பிடும் இந்த மாத்திரையால் சிறுநீரகம் பாதிக்கப்படும். கண்டிப்பாக பாதிக்கப்படும், சந்தேகமே இல்லை.
நாம் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் வாழும் மனிதர்கள்.
இறைவன் இந்த கனமழை மூலம் என்ன உணர்த்தியிருக்கிறான் என்பதை உணராதவர்கள்.
மனிதனை ஒரே சமுதாயமாக இறைவன் படைத்தான். ஆனால் மனிதர்களோ, நாங்கள் வெவ்வேறு சமுதாயம் என்கிறார்கள். பணத்துக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறார்கள்.
பணம் நம்மை பாதுகாக்கிறது. கடவுளே என்னை காப்பாற்று. எல்லோரும் தங்கள் வேற்றுமையை மறந்து, வனத்தைப் பார்த்து கடவுளே என்று அழைக்கவில்லையா. மழை முடிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களை எல்லோரும் தக்க முகாந்திரத்துடன் பாதிக்கப்பட்டவர்கள். காப்பாற்றப்பட்டவர்கள் தக்க முகாந்திரத்துடன் காப்பாற்றப்பட்டவர்கள். பயபக்தியாளர்களை இறைவன் பாதுகாப்பான். நியாய உணர்வோடு வாழ்பவர்களை நோயிலிருந்தும், மற்ற எல்லா துன்பத்திலிருந்தும் இறைவன் பாதுகாப்பான்.