ஈரான் – ஈராக் திடீர் முடிவால் கச்சா எண்ணெய் விலை குறையும் நிலை
பல ஆண்டுகளாக எதிரி நாடுகளாக இருந்த ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் தங்கள் எண்ணெய் வளத்தை பரிமாறி கொள்ள முடிவு செய்திருப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஈராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கிர்குக் பகுதியில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யை ஈராக் டேங்கர் லாரிகள் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கும். அதை ஈரான், தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும். மீண்டும், ஈரான் அதே அளவிலான எண்ணெய்யை ஈராக்கின் தெற்கு துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கும்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அண்டை நாடான ஈராக்குடன் ஈரான் இணக்கமாக நடந்து கொண்டு அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டவுள்ளதாக கூறப்படுகிறது.