ஈரான் பயணிகள் விமானம் ஊருக்குள் விழுந்து விபத்து. 48 பேர் பரிதாப பலி.

[carousel ids=”39038,39039,39040,39041,39042,39043,39044,39045,39046,39047,39048,39049,39050,39051,39052,39053″]

ஈரான் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை ஈரானின் முக்கிய குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 48 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் நாட்டின் மேற்கு டெஹ்ரானில் மெஹ்ராபாத் என்ற பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டின் உள்நாட்டு விமானம் ஒன்று திடீரென விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. Iran-140 என்ற இந்த விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து விபத்துக்குள்ளானதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ஈரானின் மீட்புப்படையினர் உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். இந்த விபத்தில் இறந்த 48 பேர்களில் 40 பேர் பயணிகள் என்றும் 8 பேர் விமான ஊழியர்களும் என்பது தெரியவந்துள்ளது. உக்ரைனில் தயாரான இந்த விமானத்தில் மொத்தம் 52 பயணிகள் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் சிதைந்த பாகங்கள் சாலைகளின் நடுவில் விழுந்துள்ளதால் மெஹ்ரபாத் பகுதியின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

Leave a Reply