ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவாளர்கள் நடத்தும் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், அங்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈராக் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் ஆளும் ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கும், சதாம் உசேன் ஆதரவு சன்னி பிரிவு முஸ்லீம்களுக்கும் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த போர் குறித்த விவரங்களை பொதுமக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதாலும், தீவிரவாத அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு வருவதாலும், சமூக வலைத்தளங்களை தடை செய்ய அந்நாட்டு தகவல் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் காலவரையின்றி ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்கள் மூன்றுக்கும் ஈராக் அரசு தடை விதித்துள்ளது.