ஈராக்: 1400 வருடங்களுக்கு முந்தைய கிறிஸ்துவ புனிததலம் தரைமட்டம். தீவிரவாதிகள் வெறிச்செயல்
ஈராக் நாட்டில் கடந்த 1400 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த கிறிஸ்துவ புனிததலம் ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் ஒரே நொடியில் வெடிகுண்டு வைத்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால் ஈராக் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஈராக் நாட்டில் St. Elijah’s Monastery என்ற கிறிஸ்துவர்களின் புனிததலம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்று சிதிலம் அடைந்து இருந்தது. இருப்பினும் இந்த கட்டிடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த இடங்களில் ஒன்று.
இந்நிலையில் இந்த கட்டிடம் இருக்கும் மோசூல் நகரின் தெற்கு பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள், இந்த கட்டிடத்தை குண்டுவைத்து ஒரே நொடியில் தகர்த்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால் ஈராக்கில் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Chennai Today News: Iraq`s oldest Christian monastery that has stood for 1,400 years is destroyed in seconds by ISIS