உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி, முதலில் மேற்கிந்தியதீவுகள் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ரன்கள் குவித்தது. சிம்மன்ஸ் 102 ரன்களும், ஷம்மி 89 ரன்களும் எடுத்தனர்.
305 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, 45.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஸ்டிர்லிங் 92 ரன்களும், ஜோய்ஸ் 84 ரன்களூம், பிரெய்ன் 79 ரன்களும் எடுத்தனர்.
ஸ்டிர்லிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி பி பிரிவில் 2 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.