மூத்த தலைவர் அத்வானியை அவமதித்தாரா பிரதமர் மோடி?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே சக்திமிகுந்த தலைவராக விளங்கிய விளங்கிய பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. ஆனால் திடீரென கட்சியில் செல்வாக்கு பெற்று, பிரதமர் வேட்பாளர் ஆனார் அத்வானி. இருப்பினும் அவர் அத்வானிக்கு மூத்த தலைவர் என்ற மரியாதையை கொடுத்து கொண்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். திரிபுரா முதல்வராக பிப்லாப் தேப் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மேடைக்கு வந்தபோது, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார். மேடையின் நடுவில் இருந்த மாணிக் சர்க்காரின் கையைப் பிடித்து சிறிது நேரம் பேசிவிட்டு நாற்காலியில் மோடி அமர்ந்தார்.
ஆனால், பிரதமர் மோடி நடந்து வரும்போது, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி வணக்கம் செலுத்திய போது, அவரை கண்டுகொள்ளாமலும் பதிலுக்கு வணக்கம் கூறாமலௌம் பிரதமர் மோடி அவரை கடந்து சென்றார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் சுருங்கி, அவமானத்துக்கு உள்ளானார்.
இந்த காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதோடு, மோடி மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.
#WATCH Agartala: Former Tripura CM Manik Sarkar and PM Narendra Modi meet at swearing ceremony of Biplab Deb and others pic.twitter.com/89QtBYkeVm
— ANI (@ANI) March 9, 2018