இலங்கை மீது பொருளாதார தடையா? அமெரிக்க அமைச்சர் விளக்கம்.

அமெரிக்காவின் ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நிஷா பிஸ்வால், நேற்று இலங்கைக்கு வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்த அவர், இலங்கை நடந்த போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அதனால் உலக நாடுகள் இலங்கை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், இறுதிகட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டத்தில் அமெரிக்க அரசு கொண்டு வருவது உறுதி என்று தெரிவித்த பிஸ்வால், இருப்பினும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இலங்கையின் நேற்றைய சுற்றுப்பயணத்தின்போது பிஸ்வால், அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் தற்போதையை இலங்கை நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை பயணத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் இங்கிலாந்து செல்கிறார்

Leave a Reply