அடுத்த அமெரிக்க அதிபர் இந்தியரா? பரபரப்பு தகவல்

bobby jindalஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்க வாழ் இந்தியரான பாபிஜிண்டாலும் களத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக ஜெப் புஷ் போட்டியிடவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பாபிஜிண்டாலும் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புவதாகவும், அதற்காக குடியரசு கட்சியின் தலைமையிடம் அவர் வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜெப் புஷ்ஷை அடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிட 10 பேர் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளதால் பாபிஜிண்டாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது லூசியானா மாகாணத்தின் கவர்னராக உள்ள பாபிஜிண்டால், ஒருவேளை வாய்ப்பு பெற்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply