மத்திய பட்ஜெட்டுக்கு கருணாநிதி பாராட்டு. காங்கிரஸ் அதிருப்தி

மத்திய பட்ஜெட்டுக்கு கருணாநிதி பாராட்டு. காங்கிரஸ் அதிருப்தி

karunanidhiகடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், நேற்று பாஜக அரசின் பட்ஜெட்டை திமுக தலைவர் மு.கருணாநிதி பாராட்டியுள்ளது காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டை காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் குறைகூறியுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா உள்பட பலர் விமர்சனம் செய்திருக்கும் நிலையில் அருண் ஜேட்லி தாக்குதல் செய்துள்ள பொது நிதிநிலை அறிக்கையின் மூலமாக இந்த பட்ஜெட் தேர்வில் பிரதமர் மோடி தேர்ச்சி பெற்றுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் இந்த கருத்து டெல்லி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவுக்கு அவர் ஆதரவு அளிப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர் ஒருவர் கருத்து கூறியுள்ளார். இதனால் வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2ஜி வழக்கு நிலுவையில் இருப்பதால் பாஜகவை விமர்சனம் செய்யாமல் மென்மை போக்குடன் கருணாநிதி நடந்து கொள்வதாகவும் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply