இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி கங்குலிக்கு கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி கங்குலிக்கு கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து புதிய  இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாக கூட்டங்களில் பங்கேற்ற அனுபவம் இருப்பதால் அவரை நியமனம் செய்ய  சுப்ரீம் கோர்ட்டு நியமித்த மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த பதவிக்கு கங்குலி மிகவும் பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply