அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகலா? ஹிலாரி கிளிண்டன் விளக்கம்

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகலா? ஹிலாரி கிளிண்டன் விளக்கம்

hilariஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த அதிபருக்காக ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வரும் நிலையில் உடல்நிலை காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து ஹிலாரி விலக உள்ளதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் பொதுக்கூட்ட மேடையில் ஹிலாரியால் ஒரு மணி நேரம் நின்றுகூட பேச முடியாத அவரால் எப்படி அதிபர் பணியை ஒழுங்காக செய்ய முடியும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பினர்

இந்நிலையில் மூன்று நாள் ஓய்வுக்கு பின்னர் மிண்டும் பிரச்சாரத்தில் குதித்துள்ள ஹிலாரி இதுகுறித்து கூறியதாவது, ‘ என்னை குறித்து சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் எனக்கு உள்ளது. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நான் ஆட்சிக்கு வந்தால் முதல் 100 நாட்களுக்குள் குடியேற்ற விதிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வேன். எல்லோரையும் அரவணைத்து செல்வேன்’ என்று கூறினார்.

Leave a Reply