இயக்குனர் பாண்டிராஜ் தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கின்றார். இந்த பணிகளை முடித்தவுடன் அவர் நடிகர் சூர்யாவின் 2D தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சூர்யா நடிக்கும் இந்த படத்தில் முதலில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அமலாபால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தின் நட்சத்திரங்களை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் பசங்க படத்தில் நடித்த நால்வரும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா தற்போது நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.