‘கத்தி’ திருட்டுக்கதையா? ஃபேஸ்புக்கில் பரவும் ஆதாரங்கள். திடுக்கிடும் தகவல்

madras and kaththiஉலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ‘கத்தி’ படத்தின் கதை ஒரிஜினலாக கோபி என்பவருடைய கதை என்றும், அந்த கதையை முருகதாஸ் திருடி படமாக எடுத்துவிட்டதாகவும் சில ஆதாரங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோபி என்ற உதவி இயக்குனர் ‘மூத்த குடி’ என்ற கதையை எழுதி முருகதாஸ் அவர்களுக்கு ரிஜிஸ்டர் போஸ்ட்டில் அனுப்பியிருந்தாராம். அந்த கதையை பார்த்து கோபியை நேரில் அழைத்த முருகதாஸ், அந்த கதை குறித்து ஆலோசனை செய்துள்ளார். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த முயன்ற் ஒரு மல்டி நேஷனல் நிறுவனத்தை எதிர்த்து மூத்த குடிமக்கள் நடத்தும் போராட்டம்தான் கதை.

இந்த கதையை கண்டிப்பாக திரைப்படம் எடுக்கலாம் என்று கோபியிடம் உறுதி கூறிய முருகதாஸ், தன்னுடைய பாணிக்கு தகுந்தவாறு சில மாற்றங்கள் செய்து கொள்ள அனுமதி கேட்டதாகவும், அதற்கு கோபி அனுமதி தந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் சில நாட்கள் கழித்து முருகதாஸ் இந்த படத்தை தற்போது எடுக்கக்கூடிய நிலையில் தான் இல்லை என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம். ஆனால் சமீபத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் தன்னுடைய கதைதான் என்று தனக்கு இப்பொழுதுதான் தெரிய வந்ததாகவும் அதனால் முருகதாஸ் மீதும், அந்த படத்தில் நடித்த விஜய் மீதும் லைகா நிறுவனம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக கோபி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவருடைய மூத்த குடி கதையில் விஜய்யின் கேரக்டரே இல்லை. பெரியவர்கள் மட்டுமே சேர்ந்து போராடுவதாக உள்ளது. கதையின் சுவாரசியத்திற்காக விஜய்யின் இரண்டு கேரக்டர்களை முருகதாஸ் இணைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கோபி நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கத்தொடங்கியதும் முருகதாஸ் தரப்பில் இருந்து ஒருவர் சமாதானம் பேசியதாகவும், சில லட்சங்கள் மட்டும் தனக்கு தருவதாகவும் கூறியதால் தான் மறுத்துவிட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்ற படியேறி இருப்பதாகவும் கோபி அதில் கூறியுள்ளார்.

இதேபொல சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் கதையும் கோபியின் கதை என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின்னர்தான் கோபி சொல்வது உண்மையா? என்பது தெரியவரும்.

Leave a Reply