அத்தகைய கொழுப்புகள் ஏன் அவசியம் அவற்றில் விட்டமின் E, செலினியம் உட்பட பல அன்ரி ஒட்சிடனட்ஸ் (antioxidants) உண்டு எமது உணவில் உள்ள கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்களை உணவுக் குழாய் உறுஞ்சுவதற்கு அவை உதவும். இதய நோய், நீரிழிவு, புற்றுநோய், அழற்சி நோய்கள் (inflammation), புற்று நோய்கள், தசைப்பிடிப்பு நோய்கள் போன்ற பல்வேறு நாட்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்க அவை உதவும்.
உயர் இரத்த அழுத்தம், குருதியில் அதிகரித்த, கொலஸ்டரோல், மற்றும் அழற்சி நோய்களைக் கட்டுப்படுத்தவும் அவை உதவும். மூளை வளர்ச்சி அதன் சிறப்பான செயற்பாடு போன்றவற்றி்ற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் (omega-3 fatty acids) போன்றவை உதவுகின்றன. எனவே தினமும் ஓரளவு கொழுப்பு உணவில் சேரவேண்டும்.
அது நல்லவகை கொழுப்பாக இருப்பது விரும்பத்தக்கது. எவருக்குமே தினசரி ஓரளவு கொழுப்பு உணவில் சேர்வது அவசியமாகும். ஒருவருக்கு நாளாந்தம் 2000 கலோரி சக்தி தேவை எனில் அவர் தினசரி 65 கிராம் அளவு கொழுப்பை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.