சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவது சாத்தியமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தன்னை தமிழக சிறைக்கு மாற்ற கடிதம் எழுதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த வழக்கு தமிழகத்தின் வழக்கு என்பதாலும், இதில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்து வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாலும், தன்னை இந்த வழக்கு தொடங்கிய தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சசிகலா கோரவுள்ளதாகவும், இதுகுறித்து அவர் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன
மேலும் இருமாநில சிறைத்துறை அதிகாரிகள் பரஸ்பரமாக இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டாலே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளர் ஆட்சி நடைபெற்று வருவதால் யாராவது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தால் இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு தேவையான உத்தரவை பிறப்பிக்கும் என்றும் சிறை அதிகாரி தெரிவித்தார்.