மலேசிய விமானம் காணாமல் போய் பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த விமானம் குறித்து தெளிவான தகவல் ஒன்றும் தெரியவில்லை. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.
இதனிடையே விமானம் கடத்தப்பட்டிருக்கும் என்பதை தாங்கள் நம்பவில்லை என்றும் மலேசிய உடனடியாக விமானத்தை தேடும் பணியினை மலேசியா விரிவுபடுத்த வேண்டும் என்றும், தேடுதலுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் விமானம் கடத்தப்பட்ட பின்னர் விமானி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் அதனால்தான் விமானம் இருக்குமிடம் குறித்த தகவலை அறிய முடியவில்லை என்றும் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளீவந்துள்ளன.
விமானத்தை கடத்தி மர்மமான இடத்தில் நிறுத்திய பின்னர் விமானி தற்கொலை செய்திருக்க கூடும் என்றால் மீதியுள்ள பயணிகளுக்கு விமானத்தின் டெக்னாலஜி குறித்த விபரங்கள் தெரியாமல் செய்வதறியாது இருக்கக்கூடும் என்றும் கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் விமானியின் தற்கொலை உறுதிப்படுத்தப்படவில்லை.