தீர்ப்பை திருத்த நீதிபதி குமாரசாமி எடுத்த முயற்சி தோல்வியா? திடுக்கிடும் தகவல்

kumarasamyஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா நிரபராதி என்ற தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்தில் தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி குமாரசாமி, தான் அளித்த தீர்ப்பு குறித்து தனது உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் உயர் நீதிமன்ற பதிவாளரை குமாரசாமி சந்தித்ததாகவும், அப்போது சில திருத்தங்களை நீதிபதி குமாரசாமி கூறியதாகவும், அதற்கு பதிவாளர் சில விளக்கங்களை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை திருத்தக் கூடாது என  சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக ஐகோர்ட் பதிவாளர் பட்டீலிடம் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை திருத்த நீதிபதி குமாரசாமி மூன்று முறை தலைமை நீதிபதியை சந்திக்க முயற்சி மேற்கொண்தாகவும், ஆனால் குமாரசாமியை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியுடன் நடந்த உயர்மட்ட ஆலோசனையில், இந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்துக்கு தீர்ப்பு நகல் அனுப்பி வைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பணி முடிந்துவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றமே தீர்வு காண முடியும்” எனக்கூறிவிட்டு,   வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் மனுவை ஏற்க கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் மறுத்துவிட்டார்.

தீர்ப்பை திருத்த முயன்ற நீதிபதி குமாரசாமியை, கர்நாடக தலைமை நீதிபதி சந்திக்க மறுத்துள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply