லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு போலியா? திமுக அலறல்
நேற்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்தியதாக ஒரு கருத்துக்கணிப்பு வெளிவந்தது. இந்த கருத்துக்கணிப்பின்படி முதல்வர் வேட்பாளரில் முதலாவது கருணாநிதியும், இரண்டாவதாக ஸ்டாலினும் மூன்றாம் இடத்தில் ஜெயலலிதா இருப்பதாகவும், 35.6% தி.மு.க.வுக்கும், 33.1% அ.தி.மு.க.வுக்கும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூறியது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென லயோலா கல்லூரியிடம் இருந்து ஒரு கருத்து வெளிவந்தது. இந்த கருத்துக்கணிப்பு லயோலா கல்லூரி வழக்கமாக எடுக்கும் குழு எடுக்கவில்லை என்றும், இந்த கருத்துக்கணிப்பு முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்களின் அமைப்பான ‘பண்பாட்டு மக்கள் தொடர்பகம்’ எடுத்திருப்பதாகவும், இந்த கருத்துக்கணிப்புக்கும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததால் பெரும் சந்தோஷத்தில் இருந்த திமுக உடன்பிறப்புகள் இந்த கருத்துக்கணிப்பே பொய்யானது என்று தெரியவந்ததும் படு அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவே இப்படி ஒரு பொய்யான கருத்துக்கணிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் ஆளும் கட்சி சந்தேகப்படுவதாகவும், ஆனால் இந்த பொய்யை ஒருநாள் கூட திமுகவால் மறைக்க முடியவில்லை என்றும் ஒரு கருத்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்மையான கருத்துக்கணிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Is Lyola college election survey is duplicate?