மிச்சேல் ஒபாமா அடுத்த அதிபரா? ஒபாமா பதில்
பில் கிளிண்டனை அடுத்து அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டதுபோல ஒபாமாவை அடுத்து அவரது மனைவி மிச்சேல் ஒபாமா அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து கருத்து கூறிய ஒபாமா, ‘மிச்செல் ஒருபோதும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்ப மாட்டார். மிச்செல் திறமை வாய்ந்தவர் என்பதி எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் அமெரிக்க மக்களுடன் வியக்கத்தக்க தாக்கத்தை கொண்டு உள்ளார். ஆனால் அவர் அரசியலுக்கு வருவார் என்று நான் கூறினால் அது நிச்சமயம் தமாஷ்தான்’ என்று கூறினார்.
ஹிலாரிக்கு ஆதரவாக மிச்சேல் தேர்தல் பிரச்சாரம் செய்த போதிலும் மிச்சேலுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் ஹிலாரி வெற்றி வெற்றி பெற்றிருந்தாலும் அவர் அமைச்சரவையில் இணைந்திருக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.
எனவே அமெரிக்காவை பொருத்தவரை இப்போதைக்கு பெண் ஒருவர் அதிபராக வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்படுகிறது