மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே பிரச்சாரட்த்ஹில் தீவிரம் ஏற்பட்டுள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் பேசியதாவது “கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என்றும் நாட்டிற்காக என்ன செய்தார்கள் என்று அவர்களால் பட்டியல் இட முடியுமா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாட்டின் நிலைமையை அவர் ஒருவரே தூக்கி நிறுத்தப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தேசத்துக்காக உழைத்த அம்பேத்கர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு ஆகியோரின் தியாகங்களை என்ன செய்வது? நாட்டின் வளர்ச்சிக்கு மக்களாகிய நீங்களும் உங்களது முன்னோர்களும் தான் காரணம்.
உங்களது வியர்வையும், ரத்தமும் தான் இந்த நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம்” என்றார்
பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் என்று ராகுல் காந்தி பேசியதால் கூட்டத்தின் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.