முலாயம் சிங் யாதவ் வீட்டுச்சிறையா? உ.பியில் பெரும் பரபரப்ப்
சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் உபி மாநில முதல்வருமான முலாயம் சிங் அவருடைய உறவினர்களால் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக லோக் தாள் கட்சியின் தேசிய தலைவர் சுனில் சிங் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக முலாயம் சிங் யாதவுக்கும் அவருடைய மகனும் உபி முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவுக்கு கட்சியில் அதிக செல்வாக்கு இருந்ததால் கட்சியை கைப்பற்றியதோடு கட்சியின் சின்னத்தையும் தக்க வைத்து கொண்டார். இதனால் வேறு வழியின்றி முலாயம்சிங் யாதவ் சமாதானம் அடைந்து மகனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தனது உறவினர்களால் சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் சுனில் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், முலாயம் சிங்கை பார்க்க யாரையும் அகிலேஷ் விடுவதில்லை. முலாயம் சிங்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டு என்று வலியுறுத்தியுள்ளார்.