காங்கிரஸில் சேருகிறாரா பழ.கருப்பையா?
துக்ளக் விழாவில் அதிமுக அரசுக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பழ.கருப்பையா, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டம் ஒன்றில், பழ.கருப்பையா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.சம்பத்தின் 91-வது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியொர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசவுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக எதிரான ஒரு கட்சியின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதால் அரசுக்கு எதிராக அவரது பேச்சு காட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலு அவர் காங்கிரஸில் சேர்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.