விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியுமா?

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியுமா?

vijay mallaiahஇந்திய வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று பண மோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் விஜய் மல்லையா அடுத்த 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் பல நாடுகளில் அவருக்கு இருக்கும் சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் முடக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய் மல்லையாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கினாலும், பிரிட்டனிலிருந்து அவ்வளவு எளிதில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்றே கூறப்படுகிறது. குறிப்பாக பிரிட்டனிலிருந்து ஒருவரை நாடுகடத்துவது என்பது மிகமிகக் கடினம், ஏனெனில் அங்கு மனித உரிமைகளுக்கான மதிப்பீடு உயர்வாக மதிக்கப்படுகிறது.

அமலாக்கத் துறைக்காக அடிக்கடி ஆஜராகும் வழக்கறிஞர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, “உலகெங்கும் அவருக்கு இருக்கும் சொத்துக்கள் முடக்கப்படுவதால் அவர் இங்கு வர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். சொத்துக்கள் இல்லாமல் அவரால் வாழ முடியாது” என்று கூறியுள்ளார்.

இன்னொரு அமலாக்கப் பிரிவு அதிகாரி கூறியபோது, “இங்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க அவருக்கு ஒரு வாய்ப்பு. பிரிட்டன் மட்டுமல்ல வேறு எந்த நாடுமே நாடுகடத்துவதற்கு அனுமதிக்காது. இது குறித்த இருதரப்பு ஒப்பந்தம் இருந்தாலும் அவரை இந்தியா கொண்டு வர நாம் வற்புறுத்த முடியாது. பிரிட்டனுக்கு கோரிக்கை வேண்டுமானால் அனுப்பலாம்.

எனவே, சொத்துக்கள் முடக்கம் தவிர மல்லையாவை இங்கு வரவழைப்பதற்கான வேறு வழிகள் எதுவும் அமலாக்கப் பிரிவினருக்கு இல்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் கூறியபோது, “விஜய் மல்லையா மகன் மற்றும் மகளை மத்திய அரசு கைது செய்து, அவர் வந்தால் தான் இவர்களை விடிவிப்போம் என்று கூறினால் அடுத்த விமானத்தில் வந்து விடுவார். இது சட்டபடியான நடவடிக்கை இல்லைதான். ஆனால் இவர் தப்பித்து சென்றது மட்டும் சட்டப்படியானதா?. இது போல அதிரடியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்ககூடாது. சாமானியனை அடித்து துவைக்கும் அரசு, டீசண்டாக மகனையும் மகளையும் கைது செய்து உயர்ரக சிறையில் அடைக்கலாமே? ‘என்று கருத்து கூறியுள்ளார்.

Leave a Reply