அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரிலீஸாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், செய்தி நிறுவனங்கள் அனைத்துமே அந்த படத்தின் எதிர்பார்ப்பு, மற்றும் செய்திகள், முன்னோட்டம் ஆகியவைகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ஊடகங்கள் கிட்டத்தட்ட விஜய்யின் ‘புலி’ பற்றிய செய்திகளை மறந்தே விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிரடி நடவடிக்கை எடுக்க ‘புலி படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘என்னை அறிந்தால்’ படம் ரிலீஸாகும் தினமான பிப்ரவரி 5ஆம் தேதி ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை குத்தகைக்கு எடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் டிரண்டில் வைத்துள்ள நிலையில் அவர்களிடம் இருந்து டுவிட்டரை கைப்பற்ற ‘புலி’ பர்ஸ்ட் லுக் உதவும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.