காசு கொடுத்து வாங்கப்பட்டதா புலி லைக்ஸ்? அதிர்ச்சி தகவல்
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் டிரைலர் யூடியூப் சேனலில் இந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை செய்த விஷயத்தை கடந்த இரண்டு நாட்களாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சிலர் ஒரு உண்மையை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கட்டினால், அந்த பணத்திற்கு ஏற்றவாறு லைக்ஸ்களை அந்த சமூக வலைத்தளத்தின் அட்மின்கள் அதிகரித்து தருவார்கள். இதுபோன்று ‘புலி’ டிரைலருக்கு பணம் கட்டியே லைக்ஸ்களை அதிகரித்துள்ளதாக இன்று காலை முதல் டுவிட்டரில் பதிவு செய்து அதற்கு ஆதாரங்களையும் சிலர் வெளியிட்டு வருகின்றனர். இந்த லைக்ஸ்களை பெறுவதற்காக புலி தயாரிப்பாளர்கள் ரூ.7 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் பதிவு செய்து வருகின்றனர்.
விஜய்யின் ‘புலி’ டிரைலர் இந்திய சாதனை செய்ததை இதுவரை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்த பலர் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இதேபோல் பிரபல நிறுவனம் ஒன்று நடத்திய ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற சர்வேயின்போது விஜய் தரப்பினர் காசு கொடுத்து அந்த பட்டத்தை வாங்கியதாக வதந்தி பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.