ராஜபக்சேவின் இளைய மகன் கைதா? இலங்கையில் பெரும் பரபரப்பு
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித்த ராஜபக்சே முறைகேடான முறையில் கடற்படையில் அதிகாரியாக சேர்ந்து பணிபுரிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் அவர் மீது எந்த நேரமும் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என இலங்கை அரசு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முறைகேடாக பணியில் இணைந்தது மட்டுமின்றி சிறந்த கடற்படை அதிகாரி விருதும் யோஷித்த ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டது என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் டபிள்யூ.பி. வெல் தலைமையிலான விசாரணையில், அவர் குற்றம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ராஜபக்சேவின் மகன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராஜபக்சே தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.