சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதியா?
Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார். கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு படங்களின் விடாத படப்பிடிப்பு மற்றும் வெளிநாட்டு பயணம் ஆகியவற்றால் சோர்வுடன் இருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ரஜினிகாந்த் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் இணையதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தரப்பில் இருந்து அவருடைய உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அவர்களுக்கு நடைபெற்றது ஒரு சாதாரண மருத்துவ பரிசோதனைதான் என்றும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply