சஞ்சய்தத் விடுதலையில் திடீர் சிக்கல். மீண்டும் சிறையா?
257பேர் பலியான மும்பை குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடையவர் என்ரு கூறப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. வழக்கு நடந்த காலங்களிலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அந்த 18 மாதங்கள் போக மீதி 42 மாதங்கள் அவர் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சஞ்சய்தத் தண்டனை காலத்தின்போது 2 முறை பரோல் மற்றும் 2 முறை விடுமுறை என வெளியே வந்தார். அவருடைய தண்டனைக்காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் நன்னடத்தை காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனால் அவர் நாளை விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சய் சித் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலர் நன்னடைத்தை காரணமாக தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் சஞ்சய்தத்துக்கு மட்டும் அந்த சலுகை வழங்கப்படுவது ஏன் என்றும ஒருசில அரசியல் நிர்பந்தம் காரணமாகவே சஞ்சய் தத் விடுவிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் நிதின் சாத்புடே என்பவர் தொடர்ந்துள்ள இந்த பொதுநலன் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் சஞ்சய்தத் விடுதலையில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது
Chennai Today news: Is Sanjay Dutt release today?