நான்கு வருட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படம் குறித்து ஒருசில தகவல்கள் வெளியாகி கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீத்-ஷாலினி காதல் உண்டானது. அதன்பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சரண் எடுத்துக்கொண்டிருக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ திரைப்படம் அஜீத்-ஷாலினி தம்பதியின் உண்மையான காதலை பற்றிய கதை என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
‘ஆயிரத்தில் இருவர்’ என்ற தலைப்பில் உள்ள இருவர் அஜீத், ஷாலினி ஆகிய இருவரையும் குறிப்பதாகவும், அஜீத் வேடத்தில் வினய் நடிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சரண் இந்த படத்தின் கதை குறித்து அஜீத், ஷாலினியிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே இந்த படத்தை அவர் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நாட்களாக இந்த செய்தி கசிந்து வருவதை அறிந்து திடுக்கிட்ட இயக்குனர் சரண், சமீபத்தில் ஒரு முன்னணி சினிமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ” அஜித்தும் ஷாலினியும் தான் இயக்கிய “அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பில்தான் காதலில் விழுந்தார்கள். அவர்களின் காதலுக்கு நானும் ஒரு வகையில் காரணமாக இருந்தேன் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுடைய காதல் உன்னதமானது. அதை திரைப்படமாக கண்டிப்பாக எடுக்க முடியாது என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.