வரும் தேர்தலில் சசிகலா போட்டியா?

வரும் தேர்தலில் சசிகலா போட்டியா?
sasikala1
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறிப்பு அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி விவகாரம், வேட்பாளர் தேர்வு நேர்காணல், பிரச்சாரம், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி ஆகியவற்றில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் சில விஐபிக்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் சசிகலா என்பதுதான் பரபரப்பு செய்தி.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி கடந்த 2001 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் அதிமுக வசம் உள்ளதால் பாதுகாப்பான இந்த தொகுயில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா போட்டியிடப் போவதாக தொகுதி முழுக்க பேச்சு அடிபட்டு கொண்டிருக்கின்றது.  :

“சசிகலா போட்டியிடப் போவதாக பேச்சு இருப்பது உண்மைதான் என்றும் விரைவில் கட்சித் தலைமையிடம் இருந்து சிக்னல் வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே ஒரத்தநாடு தொகுதி இருப்பதால் இங்கு சசிகலா போட்டி யிட்டால் தஞ்சாவூர், மன்னார்குடியில் உள்ள அவரது உறவினர்களும், கட்சிக்காரர்களும் இந்த தொகுதியில் தீவிரமாக வேலை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் ஒருசிலர் இதுவொரு வதந்தி என்றும் சசிகலாவே தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் போயஸ் தோட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒருசிலர் வேண்டுமென்றே இந்த வதந்தியை பரப்பி வருவதாகவும் ஒரு கருத்து கூறப்பட்டு வருகிறது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வந்தபின்னர்தான் சசிகலா போட்டியிடுகிறாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவரும்.

Leave a Reply