சிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது அறிவித்ததா தமிழக அரசு?

சிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது அறிவித்ததா தமிழக அரசு?

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் கடந்த ஆறு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்றிரவு மொத்தமாக ஆறு ஆண்டுகளுக்கும் சேர்த்து விருதுகள் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த விருதுகள் பட்டியலில் சிறந்த படம் சிறப்பு பரிசு விருதை சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜன் இயக்கிய ‘மெரினா’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதே படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் சிறப்பு பரிசையும் பெற்று தந்துள்ளது.

ஆனால் ‘மெரினா’ திரைப்படம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது. 2012ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஒரு படத்திற்கு 2011அம் ஆண்டிற்கான விருது எப்படி கிடைத்தது? என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் ‘மெரினா’ திரைப்படம் 2012ஆம் ஆண்டில் வெளியானது என்ற போதிலும் இந்த படம் 2011ஆம் ஆண்டிலேயே சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது என்பதால் விருதுக்கு தகுதி பெற்றதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply