கத்தி படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதேவி குறித்த அதிர்ச்சி தரும் வதந்தி ஒன்று தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.
‘புலி’ படத்தில் ராணியாகவும், சுதீப்பின் கணவராகவும் ஸ்ரீதேவி நடித்து வருவதாகவும், இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றுக்காக ஸ்ரீதேவி உதட்டுடன் உதடு சேர்ந்த லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்துள்ளதாகவும், இதற்காக அவருக்கு கூடுதலாக ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒருசில இணையதளங்களிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. 51 வயதான ஸ்ரீதேவி முத்தக்காட்சியில் நடித்திருப்பார் என்பதை பலர் நம்ப மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நடிகர் சுதீப் கடுமையாக மறுத்துள்ள நிலையில் படக்குழுவினர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த செய்தியை முதலில் பரப்பிய ஊடகத்தை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு போட ஸ்ரீதேவியின் வழக்கறிஞர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.