சுப்பிரமணியம் சுவாமி அடுத்த தமிழக கவர்னரா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக அரசியலை மத்திய அரசு உற்று நோக்கி வருகிறது. குறிப்பாக சசிகலாவின் கையில் அதிமுக போய்விடக்கூடாது என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளதாம்
எனவே தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள ஒரு திறமையான கவர்னரை தேர்வு செய்ய முடிவு செய்த பாஜக, சுப்பிரமணியம் சுவாமியை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்த சுப்பிரமணியம் சுவாமியை சமாளிக்க பன்னீர்செல்வத்தால் முடியும் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. எனவே சசிகலாவும் அதிமுகவும் பெரும் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.