சுஷ்மா ஸ்வராஜ் ஜனாதிபதி வேட்பாளரா? அப்போ அத்வானி என்ன ஆச்சு?

சுஷ்மா ஸ்வராஜ் ஜனாதிபதி வேட்பாளரா? அப்போ அத்வானி என்ன ஆச்சு?

கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றபோது பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி இருக்கையில், நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அத்வானிக்கு ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய உள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்வுக்கான வேட்பாளர்களை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் மூத்த தலைவர் அத்வானி நிறுத்தப்படுவதை பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்த பதவிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சுமித்ரா மகாஜன், முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இவர்களில் சுஷ்மா சுவராஜூக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இவர் அத்வானியின் ஆதரவாளர் என்பதால் அத்வானியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பாது என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply