த்ரிஷாவுக்கு பன்றிக்காய்ச்சலா? திடுக்கிடும் தகவல்
சமீபத்தில் தனுஷின் முதல் பாலிவுட் நாயகி சோனம் கபூருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கியதால் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் நடிகை த்ரிஷா மாஸ்க் அணிந்தபடி டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள், சோனம்கபூரை போல த்ரிஷாவுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவிவிட்டதாக கவலை கொண்டனர். ஆனால் அவர்களுக்கு பதிலளித்த த்ரிஷா, முன்னெச்சரிக்கைக்காகவே மாஸ்க் அணிந்திருப்பதாகவும், தன்னை பன்றிக்காய்ச்சல் தாக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். அதன்பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
த்ரிஷா தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை அஞ்சலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.