எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா? மக்களிடம் ஆலோசிக்க உள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளிவந்தும் முடிவு தெரியாமல் போனதால், வழக்கை வாபஸ் பெற்று தேர்தலை சந்திக்கவுள்ளதாக சமீபத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்தார். இதற்கு தினகரனும் ஒப்புதல்வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து மக்களிடம் ஆலோசிக்கவுள்ளதாக் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தங்கத்தமிழ்செல்வன், ‘இந்த வழக்கு எங்களுக்கு எதிராக வந்தால், நான் மேல்முறையீடு செய்யமாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஒரு முடிவு கட்டுவேன். எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று கூறினார்.
மேலும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவு தொடர்பாக தனது தொகுதி மக்களிடம் தங்கத்தமிழ்செல்வன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், இன்று காலை 10 மணியளவில் ஆண்டிப்பட்டியில் நடைபெறும் கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு பின்னர் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.