இன்று கூடியது அனைத்து கட்சி கூட்டமா? திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டமா?

இன்று கூடியது அனைத்து கட்சி கூட்டமா? திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டமா?

all-partyகாவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டம் அனைத்து கட்சி கூட்டம் என்று கூறப்பட்டாலும் திமுக கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகள், எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கும் கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதால் இது அனைத்து கட்சி கூட்டமா? அல்லது திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டமா? என்று கேட்கும் அளவில் உள்ளது.

மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் என்று கூறப்படும் இந்த கூட்டத்தில் இந்தக் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை பாஜக, மக்கள் நலக்கூட்டணி, அதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவே அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக அரசு அல்லது எந்தக்கட்சி கூட்டியிருந்தாலும் திமுக பங்கேற்றிருக்கும். ஒற்றுமையோடு ஒன்றிணைவதில் ஒரு சிலருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வராதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply