ஸ்பெயின் நாட்டில் உலகின் மிக விலையுயர்ந்த பிரட் தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட ஒரு பிரட்டின் விலை சுமார் ரூ.10,000. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு அந்த பிரட்டில் அப்படி என்னதான் இருக்கின்றது என்பதை பார்ப்போம்.
இந்த பிரட் செய்யப்படும் மாவுடன் தங்கத்துகள்கள் கலக்கப்படுவதுதான் இந்த விலையுயர்வுக்கு காரணம். இந்த பிரட்டின் மாவில் 250mg அளவுக்கு தங்கத்துகள்கள் கலக்கப்பட்டு அதன்பின்னர் பிரட்டுக்கு தேவையானவை கலந்து தயார் செய்யப்படுகிறது. இந்த தங்கத்துகள் பிரட் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த தங்கத்துகள் பிரட்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக இந்த பிரட்டை தயாரிக்கும் 41வயது ஜுவான் மானுவல் மொரீனா என்பவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பான்பினா என்ற சிறிய கிராமத்தின் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கொண்டு அவர் இந்த பிரட்களை தயாரித்து வருகிறார்.