ராஜீவ் கொலையாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாதா? சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு கூறுவது என்ன?

rajiv-gandhi-s-killersசிபிஐ விசாரணை செய்யாத வழக்குகளிலும், , கடுங்குற்றம் செய்யாமல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும், மத்திய அரசின் ஆலோசனை தேவைப்படாத வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கலாம். ஆனால் அதே நேரத்தில்  ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுவதும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலோ, அல்லது 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தாலோ அவர்களை மாநில அரசு விடுக்க முடியாது” என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி பார்த்தால் ராஜீவ் காந்தி கொலையாளிகளை தமிழக அரசு விடுவிக்க முடியாது என்றே சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி தத்து தலைமையில், நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது, ”சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் உள்ள நபர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். அதேபோல், கடுங்குற்றம் செய்யாமல் ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை விடுப்பது குறித்தும் மாநில அரசு முடிவு எடுக்கலாம். மத்திய அரசின் ஆலோசனை தேவைப்படாத வழக்குகளிலும் கைதிகளை விடுவிக்கலாம்.

அதேநேரத்தில், ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுவதும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது. மேலும், 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகளையும் விடுக்க முடியாது” என உத்தரவிட்டனர்.

எனவே தற்போது பிறப்பித்த உத்தரவு ராஜீவ் காந்தி கொலை கைதிகள் வழக்கில் பொருந்தாது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் உள்ள கைதிகளை மாநில அரசு விடுக்க, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு (2014) தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply